tamilnadu

img

ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கான அறிவிப்பு முரண்பாடான விதிகளை நீக்க சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

மதுரை:
பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பணி நியமனத்தில், கல்வி தகுதியில் குறிப்பிடப் பட்டுள்ள முரண்களை நீக்கி குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என ஸ்டேட் வங்கி அதிகாரிகளுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஸ்டேட் வங்கி சார்பில், 03.01.2020 அன்று ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் சேவை) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்ப தற்கான அழைப்பு விடுக்கும் விளம்பரம் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை நிரப்புவதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.இந்த விளம்பரத்தில் “அத்தியாவசிய கல்வித் தகுதிகள்(01.01.2020 அன்று)” என்றதலைப்பில் கீழ்க்கண்டவாறு தரப்பட்டுள்ளது:“அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எந்தப் பாடத்திலிருந்தாவது பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான படிப்பாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பட்டப் படிப்பை நிறைவு செய்ததற்கான தேதி 01.01.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ இருக்க வேண்டும்.இறுதியாண்டில் அல்லது இறுதி செமஸ்டரில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை அவர்கள் தேர்வுசெய்யப்பட்டால் 01.01.2020 ஆம்தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ பட்டப்படிப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.”

பட்டப்படிப்பை முடித்தவர் களுக்கும், தற்போது பயின்று கொண்டிருப்ப வர்களுக்கும் காலக்கெடு(01.01.2020) ஒன்றாக இருக்க முடியாது. இறுதி செமஸ்டர்என்பது மே மாதத்தில்தான் நடைபெறும். பட்டப்படிப்பை 01.01.2020 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ முடித்து விட்டதற்கான ஆதாரத்தை அவர்களால் தர முடியாது.விளம்பரத்தில் தவறு இருப்பதாக உணர்கிறேன் இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இது தேவையற்ற  பிரச்சனைகளை உருவாக்குவதோடு சில தேர்வர்கள் விண்ணப்பிக்காமல் விட்டு விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.இதில் வங்கி அலுவலகா்கள் உடனடியாகத் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;